அதிகாரம் 3
2 ஆண்டவர் சாத்தானைப் பார்த்து, "சாத்தானே, ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! யெருசலேமைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் உன்னைக் கண்டிப்பாராக! நெருப்பிலிருந்து எடுக்கப்பட்ட கொள்ளியல்லவா இவர்?" என்று சொன்னார்.
3 யோசுவாவோ அழுக்குப் படிந்த ஆடைகளையுடுத்தவராய்த் தூதர் முன் நின்று கொண்டிருந்தார்.
4 தூதரோ தம் முன்னால் நின்று கொண்டிருந்தவர்களை நோக்கி, "அழுக்குப் படிந்த ஆடைகளை இவரிடமிருந்து அகற்றுங்கள்" என்றார்@ பின் அவரிடம், "இதோ, உன்னிடமிருந்து உன் அக்கிரமத்தை அகற்றிவிட்டேன்@ சிறந்த ஆடையை உனக்கு உடுத்தினேன்" என்றார்.
5 மேலும், "தலைப்பாகையொன்றை அவர் தலையில் சூட்டுங்கள்" என்றார். அவ்வாறே அவர்கள் அவருக்குத் தலைப்பாகை சூட்டிச் சிறந்த ஆடைகளை உடுத்தினர்@ ஆண்டவரின் தூதரோ அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்தார்.
6 பின்பு, ஆண்டவரின் தூதர் யோசுவாவுக்குச் செய்த அறிக்கை அதுவே:
7 சேனைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நம்முடைய நெறிகளில் வழுவாமல் ஒழுகி நம் கற்பனைகளைக் கடைப்பிடித்தால், நம் இல்லத்தில் நீ ஆளுவாய்@ நம் பிராகாரங்களுக்கும் பொறுப்பாய் இருப்பாய்@ இங்கே நிற்கும் தூதர்களோடு சேர்ந்து கொள்ள உனக்கு உரிமை தருவோம்.
8 தலைமைக் குருவாகிய யோசுவாவே, நீயும், உன் முன்னால் அமர்ந்திருக்கும் உன் நண்பர்களும் கேளுங்கள்@ அவர்கள் நல்லடையாளமான மனிதர்கள்: இதோ, நாம் நம் ஊழியனைக் கொண்டு வருவோம்: ~தளிர்~ என்பது அவர் பெயர்.
9 இதோ, யோசுவாவின் முன்பு நாம் நாட்டுகின்ற கல் இதுவே@ இந்த ஒரே கல்லில் ஏழு கண்கள் ஒளிர்கின்றன@ நாமே அதில் எழுத்துகளைப் பொறிப்போம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்@ மேலும் ஒரே நாளில் இந்த நாட்டின் அக்கிரமத்தை அகற்றுவோம்.
10 அந்நாளில், ஒவ்வொருவனும் தன் அயலானைத்தன் திராட்சைக்கொடியின் கீழும், அத்திமரத்தின் கீழும் வந்து தங்கி இளைப்பாற அழைப்பான், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."