அதிகாரம் 7
2 பேத்தேல் என்னும் ஊர்மக்கள் சராசார், ரோகோமெலேக் ஆகியவர்களுடன் தங்கள் ஆட்களை, ஆண்டவரின் அருளை மன்றாடவும்,
3 சேனைகளின் ஆண்டவருடைய இல்லத்தில் இருக்கும் அர்ச்சகர்களையும், இன்னும் இறைவாக்கினர்களையும் கண்டு, "இத்தனை ஆண்டுகளாகச் செய்து வந்தது போல், ஐந்தாம் மாதத்தில் துக்கம் கொண்டாடி எங்களை ஒடுக்கிக் கொள்ள வேண்டுமோ?" என்று கேட்டு வரவும் அனுப்பினார்கள்.
4 அப்போது, சேனைகளின் ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
5 இந்த நாட்டின் எல்லா மக்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் நீ கூற வேண்டியது இதுவே: இந்த எழுபது ஆண்டுகளாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் நோன்பிருந்து நீங்கள் துக்கம் கொண்டாடினீர்களே, எமக்காகவா நோன்பிருந்தீர்கள்?
6 நீங்கள் உண்ணும் போதும், குடிக்கும் போதும் உங்களுக்காகத் தானே உண்ணுகிறீர்கள், குடிக்கிறீர்கள்?
7 யெருசலேமில் மக்கள் குடியேறிய பின் வளம் பெருகிய போது, அதனைச் சூழ்ந்திருந்த நகரங்கள், தென்னாடு, பள்ளச் சமவெளி நிலம் ஆகியவற்றில் மக்கள் குடியேறிய போதும், ஆண்டவர் முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாக முழங்கிய சொற்களும் இவையே அல்லவா?"
8 ஆண்டவரின் வாக்கு தொடர்ந்து சக்கரியாசுக்கு அருளப்பட்டது:
9 சேனைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: நேர்மையான தீர்ப்புக் கூறுங்கள்@ ஒவ்வொருவனும் தன் சகோதரனுக்கு இரக்கமும் அன்பும் காட்டுவானாக!
10 கைம்பெண்ணையோ அனாதைப் பிள்ளையையோ அந்நியனையோ ஏழையையோ துன்புறுத்தவேண்டா@ உங்களுள் எவனும் தன் உள்ளத்தில் தன் சகோதரனுக்குத் தீமை செய்யக் கருதக்கூடாது."
11 ஆயினும் அவர்கள் செவிமடுக்க மறுத்தார்கள், புறங்காட்டிப் பின்வாங்கினார்கள், கேட்காதிருக்கும் பொருட்டுத் தங்கள் காதுகளைச் செவிடாக்கிக் கொண்டார்கள்.
12 சேனைகளின் ஆண்டவர் தம் ஆவியால் ஏவி முன்னாளைய இறைவாக்கினர்கள் வாயிலாய்த் தந்த திருச்சட்டத்தையும் வார்த்தைகளையும் கேட்டு விடாதபடி தங்கள் உள்ளத்தை வைரம் போலக் கடினமாக்கிக் கொண்டார்கள். ஆதலால் சேனைகளின் ஆண்டவர் கடுஞ்சினம் கொண்டார்.
13 நாம் கூப்பிட்ட பொழுது அவர்கள் கேட்காமல் இருந்தது போலவே, அவர்கள் கூப்பிட்ட பொழுது நாம் கேட்கவில்லை" என்கிறார் சேனைகளின் ஆண்டவர்@
14 ஆகவே, அவர்கள் முன்பின் அறியாத எல்லா மக்களினங்களின் நடுவில் சிதறச்செய்தோம்@ இவ்வாறு, அவர்கள் விட்டுச் சென்ற நாடு பாழாயிற்று@ அந்நாட்டில் போவான் வருவான் எவனுமே இல்லை@ இன்ப நாட்டைப் பாழாக்கி விட்டார்கள்."