சங்கீதம் 3
2 அவனுக்கெங்கே கடவுள் துணை புரியப்போகிறார்?" என்று என்னை இழித்துரைப்போர் பலராயுளர்.
3 ஆனால், ஆண்டவரே, என்னைக் காப்பவர் நீரே: எனக்குப் பெருமை தருபவர் நீரே@ நான் தலை நிமிரத் துணை செய்பவர் நீரே.
4 கடவுளை நோக்கிக் கூக்குரலிட்டேன்: தமது புனித மலையிலிருந்து என் குரலுக்குச் செவி சாய்த்தார்.
5 இனி நான் படுத்து உறங்குவேன், விழித்தெழுவேன்: ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவாயிருக்கிறார்.
6 என்னை எதிர்க்கச் சூழ்ந்திருக்கும் ஆயிரமாயிரம் பகைவர்க்கு நான் அஞ்சேன்.
7 ஆண்டவரே எழுந்தருளும்@ என் இறைவா, என்னைக் காத்தருளும்: என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறைகின்றீர்@ தீயோரின் பல்லை உடைக்கின்றீர்.
8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்: உம் மக்கள் மீது ஆசி தங்குக.