சங்கீதம் 10
2 இதோ பாவிகள் வில்லை வளைக்கிறார்கள்@ நாணில் அம்பு தொடுக்கிறார்கள்: நேர் மனத்தோர் மீது இருளில் அம்பு எய்யப் பார்க்கிறார்கள்@
3 அடிப்படையே தகர்க்கப்படும் போது, நீதிமான் என்ன செய்யமுடியும்?" என்று நீங்கள் என்னிடம் சொல்வானேன்.
4 ஆண்டவர் தம் இருக்கை புனித ஆலயம்: ஆண்டவருடைய அரியனை வானகம்! அவருடைய கண்கள் உற்று நோக்குகின்றன: மனுமக்களை அவை பரிசோதித்துப் பார்க்கின்றன.
5 நீதிமானையும் தீயோனையும் ஆண்டவர் ஊடுருவிப்பார்க்கிறார்: தீமையை விரும்புகின்றவனை அவர் வெறுக்கிறார்.
6 பாவிகள் மீது அவர் நெருப்பு மழையும் கந்தகமும் பொழிவார்: அனல் காற்றே அவர்கள் கதி.
7 ஏனெனில் ஆண்டவர் நீதியுள்ளவர், நீதியை நேசிப்பவர்: நேர்மையுள்ளவர்கள் அவர் முகத்தைக் காண்பார்கள்.