அதிகாரம் 1
2 என்னுடனிருக்கும் எல்லாச் சகோதரரும், எழுதுவது:
3 நம் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் சமாதானமும் உண்டாகுக!
4 இவரே நம் கடவுளும் தந்தையுமானவரின் திருவுளத்திற்கேற்ப, பொல்லாத இன்றைய உலகினின்று நம்மை விடுவிக்கும்படி, நம் பாவங்களுக்காகத் தம்மையே கையளித்தவர்@
5 அப்பரம தந்தைக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக! ஆமென்.
6 கிறிஸ்துவின் அருளால் உங்களை அழைத்தவரை விட்டு விட்டு, இவ்வளவு குறுகிய காலத்தில், வேறொரு நற்செய்தியைப் பின்பற்றப் போய்விட்டீர்களே! எனக்கே வியப்பாய் இருக்கிறது.
7 வேறொரு நற்செய்தி இருக்கிறது என்பதன்று@ உங்கள் மனத்தைக் குழப்பிக் கிறிஸ்துவின் நற்செய்திகளைத் திரிக்க விரும்பும் சிலர் உள்ளதுதான் தொல்லை.
8 ஆனால், நாங்கள் அறிவித்த நற்செய்தியினின்றும் வேறான ஒன்றை, நாங்களோ, விண்ணிலிருந்து வந்த ஒரு தூதரோ, யார் வந்து அறிவித்தாலும், அவன் சபிக்கப்படுக!
9 ஏற்கனவே சொல்லியிருக்கிறோம், இப்பொழுது திரும்பவும் சொல்லுகிறேன்: நீங்கள் பெற்றுக் கொண்ட நற்செய்தினின்று வேறானதொன்றை எவனாவது உங்களுக்கு அறிவித்தால், அவன் சபிக்கப்படுக!
10 இப்படி நான் சொல்லும்போது, நான் தேடுவது மனிதருடைய நல்லெண்ணமா, கடவுளுடைய நல்லெண்ணமா? நான் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கவா பார்க்கிறேன்? இன்னும் மனிதருக்கு உகந்தவனாய் இருக்கப் பார்த்தால், நான் கிறிஸ்துவின் ஊழியனாய் இருக்கவே முடியாது.
11 சகோதரர்களே, உங்களுக்கு ஒன்று தெளிவபுடுத்த விரும்புகிறேன். நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதனின் படைப்பன்று.
12 மனிதனிடமிருந்து நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை,. எந்த மனிதனும் அதை எனக்குக் கற்றுக்கொடுக்கவில்லை. இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாட்டின் வழியானவே அந்நற்செய்தி எனக்குக் கிடைத்தது.
13 ஒரு காலத்தில் நான் யூத மறையைப் பின்பற்றியபொழுது, என்ன செய்து வந்தேன் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். கடவுளின் திருச்சபையை எவ்வளவோ துன்புறுத்தி, ஒழிக்க முயன்றேன்.
14 முன்னோர் பரம்பரையில் ஆர்வம் மிக்கவனாய், என் இனத்தவருள் என் வயதினர் பலரினும் மேலாக யூத மறை ஒழுக்கத்தில் சிறந்து விளங்கினேன்.
15 ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தேர்ந்தெடுத்துத் தமது அருளால் என்னை அழைத்த இறைவன்,
16 தம் மகனைப் பற்றிய நற்செய்தியை நான் புறவினத்தார்க்கு அறிவிக்கும்படி, அம்மகனை எனக்குள் வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதனிடமும் போய்க் கலந்து ஆலோசிக்காமல்,
17 எனக்கு முன் அப்போஸ்தலர் ஆனவர்களையும் காண யெருசலேமுக்குப் போகாமல் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். ~அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன்.
18 மூன்றாண்டுகளுக்குப் பின்னர் கேபாவைப் பார்த்துப் பேச யெருசலேமுக்குப் போனேன்@ அங்கே பதினைந்து நாள் அவருடன் தங்கியிருந்தேன்.
19 மற்ற அப்போஸ்தலருள் ஆண்டவரின் சகோதரரான யாகப்பரைத் தவிர வேறு யாரையும் நான் காணவில்லை.
20 நான் எழுதுகிற இதில் பொய்யொன்றுமில்லை. ~கடவுளே சாட்சி.
21 பின்பு சீரியா, சிலியா நாட்டுப் பகுதிகளுக்குப் போனேன்.
22 ஆயினும் யூதேயா நாட்டுக் கிறிஸ்தவ சபைகளுக்கு அதுவரை அறிமுகம் ஆகாமலே இருந்தேன்.
23 ஒரு காலத்தில் நம்மைத் துன்புறுத்தியவன், தான் முன்பு ஒழிக்க முயன்ற விசுவாசத்தைப் போதித்து இப்பொழுது நற்செய்தி அறிவிக்கிறான் என்று மட்டும் அவர்கள் கேள்விப்பட்டிருந்தனர்.
24 அதற்காக என்னை முன்னிட்டுக் கடவுளை மகிமைப்படுத்தினர்.