“பிரவாஹன்! நீ மகா கொடியவன்.”
“ஆனால், நான் எனது வேலையை ஒப்பற்ற திறமையோடு பூர்த்தி
செய்திருக்கிறேன்.”
3
பிரவாஹன் இறந்து போய்விட்டான். ஆனால் அவனுடைய பிர்மமும், புனர்ஜென்மம் அல்லது பிதுர்லோக யாத்திரையும், சிந்து நதியிலிருந்து சதானீரா (கண்டக்) நதி வரை வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தது. வேள்வியும் இப்பொழுது குறைந்து விடவில்லை. ஏனெனில் பிர்ம ஞானிகளும் அவற்றை உற்சாகத்தோடு ஆதரிக்கிறார்கள். க்ஷத்திரிய பிரவாஹன் கண்டு பிடித்த பிர்மவாதக் கதையை பிராமணர்கள் கற்றுத் தேர்ந்து நிபுணர்களாகிவிட்டார்கள். குருகுலத்தைச் சேர்ந்த யக்ஞவல்க்கீயன் இந்த வித்தையிலே பெரும் புகழ்படைத்து விட்டான். வசிட்டன், விசுவாமித்திரன், பரத்துவாஜன் போன்ற வேதமந்திர கர்த்தாக்களைத் தோற்றுவித்த குருபாஞ்சாலம் இன்று யக்ஞவல்க்கீயனையும், அவனைப் பின்பற்றும் பிர்மவாதிகளையும் பெற்றுப் பெருமையடைந்திருக்கிறது. பிர்மவாதிகளின் சபைகளை நடத்தி வைப்பது வேள்விகள் செய்வதைவிடச் சிறந்ததாகக் கருதப்பெற்றது. ஆகவே, அரசர்கள் ராஜசூயம் முதலிய வேள்விகளுடன் கூடவோ அல்லது தனியாகவோ இந்தச் சபைகளை நடத்தி வைத்தார்கள். இந்த விவாத சபையிலே வெற்றி பெற்றவர்களுக்கு ஆயிரக்கணக்கான பசுக்களையும், குதிரைகளையும் அடிமைப் பெண்களையும் பரிசாகக் கொடுத்தார்கள். ஒவ்வொரு பரிசிலும் நிச்சயமாக அடிமைப் பெண்கள் இருப்பார்கள். ஏனெனில், அரச மாளிகையிலே வளர்ந்த இந்த அடிமைப் பெண்களை, பிர்மவாதிகள் அதிகமாக விரும்பினார்கள்.
பல சபைகளிலே யக்ஞவல்க்கீயன் வெற்றி பெற்றிருக்கிறான். ஆனால் இப்பொழுது விதேக (திருஹுத்) அரசன் ஜனகனால் கூட்டப்பட்ட பெரிய சபையிலே மகத்தான வெற்றியைப் பெற்றான். அவனுடைய மாணாக்கன் சோமஷ்ரவன் ஆயிரம் பசுக்களை ஓட்டி வரவேண்டிய நிலைமை ஏற்பட்டது. விதேகத்திலிருந்து குருபாஞ்சாலம் வரை ஆயிரம் பசுக்களை ஓட்டி வர
____________________________________________________
*ருக்வேதம் 6-26-25.
