Word |
English & Tamil Meaning |
|---|---|
| வேண்டாமை | vēṇṭāmai n. <>id.+ id.+. 1. Aversion, dislike; வெறுப்பு. வேண்டுதல் வேண்டாமையிலான் (குறள், 4). 2. Absence of desire; contentment; |
| வேண்டார் | vēṇṭār n. <>id.+ id.+. 1. See வேண்டாதார், 1. . 2. Enemies; |
| வேண்டாவெறுப்பு | vēṇṭā-veṟuppu n. <>id.+ id.+. Indifference, unconcern; உபேட்சை. அவன் அந்தக் காரியத்தை வேண்டாவெறுப்பாய்ச் செய்கிறான். |
| வேண்டி | vēṇṭi perp. <>id. For the sake of; பொருட்டு. அதை எனக்கு வேண்டிச் செய். |
| வேண்டிக்கேள் - தல் [வேண்டிக்கேட்டல்] | vēṇṭi-k-kēḻ- v. tr. <>id.+. To beseech; மன்றாடிக்கேட்டல். (யாழ். அக.) |
| வேண்டிக்கொள்(ளு) - தல் | vēṇṭi-k-koḻ- v. tr. <>id.+. To solicit, pray for, request; பிரார்த்தித்தல். |
| வேண்டிய | vēṇṭiya adj. <>id. 1. Indispensable; இன்றியமையாத. 2. Required; 3. Sufficient; 4. Many; |
| வேண்டியது | vēṇṭiyatu n. <>id. 1. That which is indispensable; இன்றியமையாதது. பயிருக்கு வேண்டியது மழை. 2. That which is required; 3. That which is sufficient; 4. That which is abundant; 5. See வேணது, 2. |
| வேண்டியமட்டும் | vēṇṭiya-maṭṭum adv. <>வேண்டிய+. 1. As much as is indispensable; அவசியமான அளவில். 2. As much as is required; 3. Sufficiently; 4. Abundantly; |
| வேண்டியவன் | vēṇṭiyavaṉ n. <>id.+. 1. Friend, favourite; பிரியத்துக்குரியவன். 2. Well-wisher, interested person; |
| வேண்டியிரு - த்தல் | vēṇṭi-y-iru- v. intr. <>id.+ இரு- To be necessary or indispensable; இன்றியமையாததா யிருத்தல். இந்தக்காலத்திற்குப் படாடோபம் வேண்டியிருக்கிறது. |
| வேண்டு - தல் | vēṇṭu- 5 v. cf. வேள்-. [K. bēdu.] tr. 1. To want, desire; விரும்புதல் பகலோடு செல்லாது நின்றீயல் வேண்டுவன் (கலித். 145). 2. To beg, entreat, request; 3. To listen to with eagerness; 4. To buy, purchase; 5. To be indispensable; to be necessary; |
| வேண்டுகோள் | vēṇṭu-kōḷ n. <>வேண்டு-+ கொள்-. Supplication, request, entreaty; பிரார்த்தனை. வென்றுபத்திரஞ் செய்துநின் வேண்டுகோளென்றார் (திருவிளை. விறகு. 51). |
| வேண்டுநர் | vēṇṭunar n. <>id. Those who wish for or desire a thing; விரும்புவோர். வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட (திருமுரு. 248). |
| வேண்டும் | vēṇṭum v. opt. <>id. 1. Verb meaning 'will be required' or 'will be necessary, indispensable'; இன்றியமையாது வேண்டத்தக்கது என்பது குறிக்கும் வியங்கோள்வினை. வேந்தனீயாகி வையமிசைபடக் காத்தல் வேண்டும் (சீவக. 201). Verb in the future tense used in all genders, numbers and persons, meaning (a) 'will be required'; (b) 'will stand in relation to'; Auxilliary verb meaning 'must'; |
| வேண்டுமென்று | vēṇṭum-eṉṟu adv. <>வேண்டும் + என்-. 1. Intentionally; முழுமனதோடு. அதை வேண்டுமென்று செய்தேன். 2. Wilfully; |
| வேண்மாள் | vēṇmāl n. Fem. of வேண்டுமான். Woman of Vēḷir-tribe; வேளிர்குலப் பெண். வேண்மாள் அந்துவஞ் செள்ளை (பதிற்றுப். 9-ஆம் பதி.). |
| வேண்மான் | vēṇ-māṉ n. <>வேள் + மான்2. Male member of Vēḷir-tribe; வேளிர் குலத்து மகன். நன்னன் வேண்மான் (அகநா. 97). |
