Word |
English & Tamil Meaning |
|---|---|
| போர்க்கதவு | pōr-k-katavu n. <>போர்2+. 1. Batten door; பலகைகளை இணைத்த கதவு. புலிப்பொறிப் போர்க்கதவின் (பட்டினப். 40). 2. Folding doors, as joined; |
| போர்க்களத்தொழிதல் | pōr-k-kaḷatt-oḷital n. <>போர்க்களம்+. (Puṟap.) Theme describing a warrior fighting to the last on the battle-field without retreating; போரிற் புறங்கொடாது வீரன் பூசற்களரியிலே பட்டதைக் கூறும் புறத்துறை. (பு. வெ, 2, 6, தலைப்பு.) |
| போர்க்களம் | pōr-k-kaḷam n. <>போர்3+. Field of battle; யத்தரங்கம். (பிங்.) போர்க்களம்பாடும் பொருநன் (பொருந. 57, உரை). |
| போர்க்களரி | pōr-k-kaṭari n. <>id.+ See போர்க்களம். போர்க்களரியிலே விழுந்தான் (பு. வெ, 2, 6, உரை) |
| போர்க்காளை | pōr-k-kāḷai n. <>போர்+. Bullock with spots on the body; உடம்பிற் புள்ளியமைந்த எருது . Nō. |
| போர்க்குறிப்பு | pōr-k-kuṟippu n. <> போர்+. Account of corn stalks cut; அரிக்கட்டுக் களின் கணக்கு. Loc. |
| போர்க்கெழுவஞ்சி | pōrkkeḷu-vaci n. <>போர் 3 + எழு-+. Panegyric on an army marching to battle, the warriors being decked with wreaths of vaci flowers; வஞ்சிமாலைசுடி யுத்தத்திற்குப் புறப்படும் வீரரைப் புகழும் பிரபந்த வகை . (W.) |
| போர்க்கோலம் | pōr-k-kōlam n. <>id.+. Military accoutrements, martial costume; hostile array; போரணி தரிக்கை. போர்க்கோல நீக்கி...முலையார் மண்ணுறுப்ப வாடி (சீவக. 2352). |
| போர்கல - த்தல் | pōr-kala- v. intr. <>id.+. To engage in a battle; போர்புரிதல். (W.) |
| போர்ச்சேவகன் | pōr-c-cēvakaṉ n. <>id.+. Soldier; படைவீரன். |
| போர்ச்சேவல் | pōr-c-cēval n. <>id.+. Game-cock, fighting cock; போர்ப்பந்தயத்துக்காக வளர்க்கப்படும் சேவல் |
| போர்த்துக்கட்டு - தல் | pōrttu-k-kaṭṭu- v. tr. <>போர்-+. 1. To adjust, settle; உள்ளுக்குள்ளே சரிப்படுத்துதல். 2. To hide; |
| போர்த்துமூடு - தல் | pōrttu-mūṭu- v. tr. <>id.+. See போர்த்துக்கட்டு-, 2. (யாழ். அக.) . |
| போர்த்தேங்காய் | pōr-t-tēṅkāy n. <>போர் 3+. Hard cocoanut used in game or contest of physical strength; பந்தயத்துக்குரிய வலிய தேங்காய். (J.) |
| போர்நிறம் | pōr-niṟam n. <>id.+. Fighting vigour; போர்ப்பொலிவு. போர்நிறப் புத்திசேனன் (சீவக. 789, உரை). |
| போர்ப்பறை | pōr-p-paṟai n. <>id.+. War-drum; இரணபேரி. போர்ப்பறை முழங்கி யெங்கும் (சீவக. 758). |
| போர்ப்பிச்சை | pōr-p-piccai n. prob. போர்+. A tax collected in ancient times at the time of the harvest from the ryots for repairs to temples; திருப்பணிக்காகக் களத்தில் தண்டப்படும் பழைய வரிவகை. (G. Tn. D. I, 313.) |
| போர்ப்பு | pōrppu n. <>போர்-. 1. See போர்வை, 1. போர்ப்புறு முரசம் (பதிற்றுப். 84, 2). . 2. Heap of threshed paddy; |
| போர்ப்பூ | pōr-p-pū n. <>போர்+. Flower for garland used by warriors when going to battle; போரில் வீரர்அணிந்துகொள்ளும் அடையாளப் பூ. போர்ப்பூவும் தார்ப்பூவும் (தொல். பொ. 626, உரை). |
| போர்ப்பை | pōrppai n. <>போர்-. (யாழ். அக.) 1. Furrow; உழவுசாலின் உட்குழிவு. 2. Handle of a small hoe; |
| போர்ப்பைக்காளை | pōrppai-k-kāḷai n. <>போர்ப்பை+. (யாழ். அக.) 1. Breeding bull; பொலியெருது. 2. Plough ox; |
| போர்ப்பையன் | pōrppaiyaṉ n. <>id. See போர்ப்பைக்காளை. (யாழ். அக.) . |
| போர்பு | pōrpu n.<> போர்-. Grain heap; தானியப் போர். குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு (புறநா. 353). |
| போர்போடு - தல் | pōr-pōṭu- v. tr. <>போர்+. To stack hay after threshing; தானியமணிகளைப் பிரித்தபின் வைக்கோலை மழையிற்கெடாதபடி குவித்து மூடுதல். (யாழ். அக.) |
| போர்மகள் | pōr-makaḷ n. <>போர்+. Goddess of victory; விசயலட்சுமி. போர்மகளை...தழுவியகை பொறாமைகூர (கம்பரா. இராவணன்) வதை . 226) . |
| போர்மடந்தை | pōr-maṭantai n. <>id.+. 1. Durgā, the Goddess of war; துர்க்கை. (W.) 2. The Goddess of valour; |
| போர்மாந்தம் | pōr-māntam n. prob. பொருமு-+. A child's disease caused by visceral obstructions; குழந்தைநோய் வகை. (பாலவா.) |
