॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத தஷமோ அத்யாய:। விபூதி யோகம்(திருப்புகழ்) |
ஸ்ரீபகவாநுவாச। |
பூய ஏவ மஹாபாஹோ ஷ்ருணு மே பரமம் வச:। யத்தே அஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா॥ 10.1 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: பெருந்தோள் உடையவனே ! எனது மேலான வார்த்தைகளை கேள். கேட்பதில் மகிழ்ச்சி அடைகின்ற உனது நன்மைக்காக நான் மீண்டும் சொல்கிறேன்.
ந மே விது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:। அஹமாதிர்ஹி தேவாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஷ:॥ 10.2 ॥ |
எனது ஆரம்பத்தை தேவர்களும் மகரிஷிகளும் அறியவில்லை. ஏனெனில் நான் தேவர்களுக்கும் மகரிஷிகளுக்கும் எல்லாவகையிலும் முற்பட்டவன்.
யோ மாமஜமநாதிம் ச வேத்தி லோகமஹேஷ்வரம்। அஸம்மூட: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே॥ 10.3 ॥ |
நான் பிறப்பற்றவன், ஆரம்பமற்றவன், உலகின் தலைவன் என்று யார் அறிகிறானோ அவன் மனமயக்கம் இல்லாதவன் . அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.
புத்திர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் தம: ஷம:। ஸுகம் து:கம் பவோ அபாவோ பயம் சாபயமேவ ச॥ 10.4 ॥ அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தாநம் யஷோ அயஷ:। பவந்தி பாவா பூதாநாம் மத்த ஏவ ப்ருதக்விதா:॥ 10.5 ॥ |
புத்தி, ஞானம், விழிப்புணர்வு, பொறாமை, உண்மை, புலனடக்கம், மனக்கட்டுப்பாடு, சுகம், துக்கம், பிறப்பு, இறப்பு, பயம், பயமின்மை, அகிம்சை, சமநிலை, திருப்தி, தவம், தானம், புகழ்ச்சி, இகழ்ச்சி என்ற உயிரினங்களில் கானபடுகின்ற பல்வேறு தன்மைகள் என்னிடமிருந்தே உண்டாகின்றன.
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா। மத்பாவா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா:॥ 10.6 ॥ |
ஏழு மகரிஷிகளும், அவ்வாறே பண்டைய நான்கு மனுக்களும் எனது சங்கல்பத்திலிருந்து எனது இயல்புடன் பிறந்தார்கள். அவர்களிடமிருந்து உலகில் உயிரினங்கள் உண்டாயின.