
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத த்ரயோதஷோ அத்யாய:। க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்(மனிதனும் மறுபிறவியும்) |
அர்ஜுன உவாச। |
இதம் ஷரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபிதீயதே। ஏதத்யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்வித:॥ 13.1 ॥ |
ஸ்ரீ பகவான் கூறினார்: அர்ஜுனா ! இந்த உடம்பு வீடு, இதை யார் அறிகிறானோ அவர் அதில் குடியிருப்பவன். உண்மையை உணர்ந்தவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
ஸ்ரீபகவாநுவாச। |
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத। க்ஷேத்ரக்ஷேத்ரயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம॥ 13.2 ॥ |
அர்ஜுனா ! எல்லா வீடுகளிலும் குடியிருப்பவன் நான் என்று அறிந்துகொள். வீடு மற்றும் குடியிருப்பவனை பற்றிய அறிவே உண்மை அறிவு என்பது எனது கருத்து .
தத்க்ஷேத்ரம் யச்ச யாத்ருக்ச யத்விகாரி யதஷ்ச யத்। ஸ ச யோ யத்ப்ரபாவஷ்ச தத்ஸமாஸேந மே ஷ்ருணு॥ 13.3 ॥ |
அந்த வீடு எது, எப்படிபட்டது, என்ன மாற்றங்களுக்கு உள்ளாவது எதிலிருந்து எது உண்டாகிறது, குடியிருப்பவன் யார், அவனது மகிமை என்ன ஆகியவற்றை சுருக்கமாக கூறுகிறேன் கேள்.
க்ருஷிபிர்பஹுதா கீதம் சந்தோபிர்விவிதை: ப்ருதக்। ப்ரஹ்மஸூத்ரபதைஷ்சைவ ஹேதுமத்பிர்விநிஷ்சிதை:॥ 13.4 ॥ |
இந்த உண்மையை முனிவர்கள் பல வடிவ பாடல்களில் பல விதமாக பாடியுள்ளனர். காரண காரியங்களுடன் நிச்சயமான வகையில் அமைந்துள்ள பிரம்ம சூத்திரங்களிலும் இது ஆராயப்பட்டுள்ளது.