॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥ அத சதுர்தோ அத்யாய:। ஞான கர்ம சன்யாச யோகம்(கடமைகளை வேள்வியாக செய்) |
ஸ்ரீபகவாநுவாச। |
இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவாநஹமவ்யயம்। விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே அப்ரவீத்॥ 4.1 ॥ |
பகவான் சொன்னது: அழிவற்ற இந்த யோகத்தை நான் விவஷ்வானுக்கு (சூரியன்) சொன்னேன். விவஷ்வான் மனுவுக்கு சொன்னான் . மனு இக்ஷ்வாவிற்கு சொன்னார்.
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது:। ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரம்தப॥ 4.2 ॥ |
எதிரிகளை வாடுபவனே ! இவ்வாறு பரம்பரையாக வந்த இந்த யோகத்தை ராஜரிஷிகள் அறிந்திருந்தார்கள். நீண்ட காலம் ஆகிவிட்டதால் இப்போது அந்த யோகம் சீரழிந்துவிட்டது.
ஸ ஏவாயம் மயா தே அத்ய யோக: ப்ரோக்த:
புராதந:। பக்தோ அஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேததுத்தமம்॥ 4.3 ॥ |
நீ என்னுடைய பக்தனாகவும், தோழனாகவும் இருக்கிறாய், எனவே பழமை வாய்ந்த அதே யோகத்தை இன்று உனக்கு சொன்னேன். இது மேலானதும் ரகசியமானதும் ஆகும்.
அர்ஜுன உவாச। |
அபரம் பவதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:। கதமேதத்விஜாநீயாம் த்வமாதௌ ப்ரோக்தவாநிதி॥ 4.4 ॥ |
அர்ஜுனன் கேட்டது உனது பிறப்பு பிந்தியது, சூரியனுடைய பிறப்பு முந்தியது, அவருக்கு நீ சொன்னதாக கூறியதை எப்படி புரிந்துக்கொள்வது
ஸ்ரீபகவாநுவாச। |
பஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந। தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரம்தப॥ 4.5 ॥ |
பகவான் சொன்னது அர்ஜுனா ! உனக்கும் எனக்கும் பல பிறவிகள் கடந்து விட்டன. எதிரிகளை வாட்டுபவனே ! நான் அவை அனைத்தையும் அறிவேன், நீ அறிய மாட்டாய் .
அஜோ அபி ஸந்நவ்யயாத்மா பூதாநாமீஷ்வரோ அபி ஸந்। ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்டாய ஸம்பவாம்யாத்மமாயயா॥ 4.6 ॥ |
நான் பிறப்பற்றவன், அழிவற்றவன், உயிர்களின் தலைவன், இருந்தாலும் சொந்த இயல்பை வசபடுத்தி கொண்டு என் மாயையினால் தோன்றுகிறேன்.