
॥ ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம:॥
அத ஷோடஷோ அத்யாய:। தைவாஸுரஸம்பத்விபாக யோகம்(மனிதனின் இரண்டு பக்கங்கள்) |
ஸ்ரீபகவாநுவாச। |
அபயம் ஸத்த்வஸம்ஷுத்திர்ஜ்ஞாநயோகவ்யவஸ்திதி:। தாநம் தமஷ்ச யஜ்ஞஷ்ச ஸ்வாத்யாயஸ்தப ஆர்ஜவம்॥ 16.1 ॥ அஹிம்ஸா ஸத்யமக்ரோதஸ்த்யாக: ஷாந்திரபைஷுநம்। தயா பூதேஷ்வலோலுப்த்வம் மார்தவம் ஹ்ரீரசாபலம்॥ 16.2 ॥ தேஜ: க்ஷமா த்ருதி: ஷௌசமத்ரோஹோ நாதிமாநிதா। பவந்தி ஸம்பதம் தைவீமபிஜாதஸ்ய பாரத॥ 16.3 ॥ |
அர்ஜுனா ! பயமின்மை, மனத்தூய்மை, ஞானத்திலும், யோகத்திலும் நிலைபெற்றிருத்தல், தானம், புலனடக்கம், வழிபாடு, சாஸ்திரங்களை படித்தல், தவம், நேர்மை, தீங்கு செய்யாமை, உண்மை, கோபமின்மை, தியாகம், அமைதி, கோள்சொல்லாமை, உயிர்களிடம் இரக்கம், பிறரது பொருளை விரும்பாமை, மென்மை, நாணம், உறுதியான மனம், தைரியம், பொறுமை, திடசங்கல்பம், தூய்மை, வஞ்சகமின்மை, கர்வமின்மை ஆகியவை தெய்வீக இயல்புடன் பிறந்தவனுக்கு உரியவை ஆகின்றன.
தம்போ தர்போ அபிமாநஷ்ச க்ரோத: பாருஷ்யமேவ ச। அஜ்ஞாநம் சாபிஜாதஸ்ய பார்த ஸம்பதமாஸுரீம்॥ 16.4 ॥ |
அர்ஜுனா ! அசுர இயல்புடன் பிறந்தவனுக்கு பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுமை, அறியாமை ஆகியவை பண்புகளாக அமைகின்றன.