அதிகாரம் 1
2 நீங்கள் இஸ்ராயேல் மக்களுடைய முழுச்சபையையும் அவரவர் வீடு, வம்சம்படி எண்ணுவீர்களாக. ஆடவர் எல்லாரையும் பெயர் குறித்து எழுதுவீர்களாக.
3 நீயும் ஆரோனும் இஸ்ராயேலரிலே இருபது வயது முதற்கொண்டு வலிமை மிக்கவர் எல்லாரையும் அணி அணியாய் எண்ணுவீர்களாக.
4 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும், தங்கள் வம்சத்திலும் குடும்பத்திலும் தலைவர்களாய் இருப்பவர்கள் உங்களோடு இருப்பார்களாக.
5 இவர்களுடைய பெயர்களாவன: ரூபனின் கோத்திரத்திலே செதெயூருடைய புதல்வனான எலிசூர்,
6 சிமையோனின் கோத்திரத்தில் சுரிஸதையுடைய புதல்வனான சலமியேல்@
7 யூதாவின் கோத்திரத்தில்அமினதாபுடைய புதல்வனான நகஸோன்@
8 இசாக்காரின் கோத்திரத்தில் சுயாருடைய புதல்வனான நத்தானியேல்@
9 சாபுலோன் கோத்திரத்தில் ஏலோனுடைய புதல்வனான எலியாப்.
10 சூசையின் புதல்வருக்குள் எபிராயீம் கோத்திரத்தில் அமியூனின் புதல்வனான எலிஸமா@ மனாசே கோத்திரத்தில் பதசூருடைய புதல்வனான கமலீயேல்.
11 பெஞ்சமின் கோத்திரத்தில் செதேயோனின் புதல்வனான அபிதான்@
12 தான் கோத்திரத்தில் அமிசதாயின் புதல்வனான ஐயேசர்.
13 ஆசேர் கோத்திரத்தில் ஒக்கிரானுடைய புதல்வனான பெகியேல்@
14 காத் கோத்திரத்தில் துயேலுடைய புதல்வனான எலியஸாப்@
15 நெப்தலி கோத்திரத்தில் ஏனானுடைய புதல்வனான ஐரா.
16 இவர்களே தம்தம் கோத்திரங்களிலும் வம்சங்களிலும் மிகப் புகழ் பெற்ற சபைப் பிரபுக்களும், இஸ்ராயேலரில் படைத் தலைவர்களுமாய் இருப்பார்கள் என்றருளினார்.
17 அப்படியே மோயீசனும் ஆரோனும் மேற்கூறப்பட்ட பிரபுக்களையும் இஸ்ராயேலின் முழுச் சபையையும் வரச்சொல்லி,
18 இரண்டாம் மாதம் முதல் நாள் (பொதுக்) கூட்டங் கூட்டி, ஆடவரெல்லாரையும் அவரவருடைய வம்சம் வீடு, குடும்பம், ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி எழுதி, இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்களையும் எண்ணிப் பார்த்தனர்.
19 அப்படிச் செய்யும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்தார். அவர்கள் சீனாய்ப் பாலைவனத்திலே எண்ணப்பட்டனர்.
20 இஸ்ராயேலுடைய மூத்த புதல்வனான ரூபனின் கோத்திரத்தில், அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை,
21 நாற்பத்தாறயிரத்து ஐந்நூறு.
22 சிமையோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க ஆடவரின் எண்ணிக்கை,
23 ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறு.
24 காத்தின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
25 நாற்பத்தையாயிரத்து அறுநூற்றைம்பது.
26 யூதாவின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
27 எழுபத்து நாலாயிரத்து அறுநூறு.
28 இசாக்காரின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
29 ஐம்பத்து நாலாயிரத்து நானூறு.
30 சாபுலோனின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத் தக்க வீரரின் எண்ணிக்கை,
31 ஐம்பத்தேழாயிரத்து நானூறு.
32 சூசையுடைய புதல்வருக்குள் எபிராயீமின் புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
33 நாற்பதினாயிரத்து ஐந்நூறு.
34 மனாசேயுடைய புதல்வரின், அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்கப்படி, இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
35 முப்பத்திரண்டாயிரத்து இருநூறு.
36 பெஞ்சமினுடைய புதல்வரிலே, அவரவரருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
37 முப்பத்தையாயிரத்து நானூறு.
38 தானுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி இருபது வயது முதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
39 அறுபத்திரண்டாயிரத்து எழுநூறு.
40 ஆசேருடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
41 நாற்பத்தோராயிரத்து ஐந்நூறு.
42 நெப்தலியுடைய புதல்வரிலே, அவரவருடைய வம்சம், குடும்பம், இனத்தாரின் வீடு, ஆள், பெயர் என்னும் ஒழுங்குப்படி, இருபது வயதுமுதல் போருக்குப் போகத்தக்க வீரரின் எண்ணிக்கை,
43 ஐம்பத்து மூன்றாயிரத்து நானூறு
44 மோயீசனலேயும், ஆரோனாலேயும், பன்னிரண்டு பிரபுக்களாலேயும் எண்ணப்பட்டவர்கள் இவர்களேயாம். ஒவ்வொருவரும் அவரவர் வம்சத்து வீட்டின் ஒழுங்குப்படி (எண்ணப்பட்டனர்.).
45 ஆகையால், இருபது வயதுமுதல் தத்தம் வம்சப்படியும் குடும்பப்படியும் எண்ணப்பட்ட இஸ்ராயேல் மக்களுக்குள்ளே போருக்குப் போகத்தக்க வீரர்களின் மொத்தத் தொகை,
46 ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது.
47 லேவியரோ தங்கள் குடும்பக் கோத்திரத்திலே எண்ணப்படவில்லை.
48 ஏனென்றால், ஆண்டவர் மோயீசனை நோக்கி:
49 நீ லேவியரின் கோத்திரத்தை எண்ணவும் வேண்டாம்@ அவர்களின் தொகையை இஸ்ராயேல் மக்களின் கணக்கிலே சேர்க்கவும் வேண்டாம்.
50 அவர்களைச் சாட்சியக் கூடாரத்தையும், அதனில் பயன்படும் எல்லாத் தட்டுமுட்டுகளையும், சடங்கு முறைகளுக்கு அடுத்தவைகளையும் கவனிக்கும்படி ஏற்படுத்து. அவர்களே கூடாரத்தையும் அதன் எல்லாப் பொருட்களையும் சுமந்து போகவும், ஊழியம் புரியவும் கடவார்கள். அவர்கள் கூடாரத்தைச் சுற்றிலும் பாளையம் இறங்குவார்கள்.
51 புறப்பட வேண்டிய போது லேவியரே கூடாரத்தைப் பிரித்து வைப்பார்கள். பாளையம் இறங்க வேண்டியிருக்குங்கால், அதை அவர்களே நிறுவி வைப்பார்கள். அந்நியன் எவனேனும் அதன் அருகே வந்தால் அவன் கொல்லப்படுவான்.
52 இஸ்ராயேல் மக்களோ தங்கள் தங்கள் அணிவகுப்பு, கொடி, படை ஆகியவற்றின்படி பாளையம் இறங்குவார்கள்.
53 லேவியரோ இஸ்ராயேல் மக்கட்சபை (கடவுளின்) கோபத்திற்கு உள்ளாகாதபடிக்குத் (திருக்) கூடாரத் தண்டையில் தங்கள் கூடாரங்களை விரித்துக் கட்டி, சாட்சியக் கூடாரத்தைக் காக்கும் அலுவலை மேற்கொள்வார்கள் என்றருளினார்.
54 ஆகையால், இஸ்ராயேல் மக்கள் ஆண்டவர் மோயீசனுக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் செய்து வந்தார்கள்.