அதிகாரம் 24
2 ஒன்றில் மிக நல்ல பழங்கள் இருந்தன@ தக்க பருவத்தில் பழுத்த முதற் கனிகள் போல் இருந்தன. மற்றதில் இருந்த அத்திப்பழங்கள் மிக்க கெட்ட பழங்களாயிருந்தன@ யாரும் தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருந்தன.
3 அப்போது ஆண்டவர் என்னை நோக்கி, "எரேமியாசே, நீ என்ன காண்கிறாய்?" என்று கேட்டார். "அத்திப் பழங்களைக் காண்கிறேன்@ அவற்றுள் நல்ல பழங்கள் மிக்க நல்ல பழங்களாகவும், கெட்ட பழங்கள் தின்ன முடியாத அளவுக்கு மிக்க கெட்ட பழங்களாகவும் இருக்கின்றன" என்றேன்.
4 அப்போது ஆண்டவருடைய வாக்கு எனக்கு அருளப்பட்டது:
5 இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: யூதாவிருந்து கல்தேயர்களின் நாட்டுக்கு நாம் அனுப்பியிருப்பவர்களை இந்த நல்ல அத்திப் பழங்களைப் போலக் கருதி நன்றாய் நடத்துவோம்.
6 அவர்களை நாம் இரக்கத்தோடு பார்ப்போம்@ திரும்ப இந்த நாட்டிற்கே அவர்களைக் கொண்டு வந்து நிலை நாட்டுவோம்@ அவர்களைக் கட்டியெழுப்புவோம்@ தகர்த்துத் தரைமட்டமாக்க மாட்டோம்@ அவர்களை நட்டு வளர்ப்போம்@ பிடுங்கி எறிய மாட்டோம்.
7 நாமே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்ளக் கூடிய உள்ளத்தை அவர்களுக்குக் கொடுப்போம்@ அப்போது, அவர்கள் நமக்கு மக்களாகவும், நாம் அவர்களுக்குக் கடவுளாகவும் இருப்போம்@ ஏனெனில், தங்கள் முழு இதயத்தோடு நம்மிடம் திரும்பி வருவார்கள்.
8 இன்னும் ஆண்டவர் தொடர்ந்து கூறினார்: தின்ன முடியாத அளவுக்குக் கெட்டுப் போயிருக்கும் அந்தக் கெட்ட அத்திப் பழங்களைப் போலக் கருதி, யூதாவின் அரசனான செதேசியாசையும், அவனுடனிருக்கும் தலைவர்களையும், யெருசலேமில் எஞ்சியிருந்து இந்நாட்டில் தங்கி விட்டவர்களையும், எகிப்து நாட்டில் இருப்பவர்களையும் நாம் நடத்துவோம்.
9 உலகத்தின் அரசுகளுக்கெல்லாம் அவர்களைத் திகிலின் அடையாளமாக்குவோம்@ நாம் அவர்களை விரட்டியுள்ள இடங்களிலெல்லாம் அவர்களை அவமானமாகவும் பழமொழியாகவும் பழிப்புக்கு உரியவர்களாகவும் சாபமாகவும் இருப்பார்கள்.
10 அவர்கள்மேல் வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றை அனுப்பி, அவர்களுக்கும் அவர்களுடைய தந்தையர்க்கும் நாம் தந்த நாட்டினின்று அவர்கள் அழியும் வரை அவர்களை வதைப்போம்."
