அதிகாரம் 56
2 இவ்வாறு செய்கிறவன் பேறு பெற்றவன்@ இதைக் கைக்கொண்டு ஓய்வு நாளை அவசங்கை செய்யாமல் அதைக் கடைப் பிடித்து, எவ்வகையிலும் தீமை செய்யாமல் தன் கைகளைக் காத்துக்கொள்ளுகிற மனிதனும் பேறு பெற்றவன்!"
3 ஆண்டவரை அணுகி வரும் அந்நியன், "தம் மக்களிடமிருந்து திண்ணமாய் ஆண்டவர் என்னைப் பிரித்து விடுவார்" என்று சொல்லாதிருக்கட்டும்@ அவ்வாறே அண்ணகனும், "இதோ, நான் பட்ட மரந்தானே" என்று கூறாதிருக்கட்டும்.
4 ஏனெனில் ஆண்டவர் கூறுவது இதுவே: "நமது ஓய்வு நாளைக் கடைப்பிடித்து, நமக்குகந்தவற்றையே தேர்ந்து கொண்டு, நமது உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றியிருக்கும் அண்ணகர்களுக்கு,
5 நமது கோயிலுக்குள் நம் சுற்றுக் கட்டடங்களில் ஓர் இடமும், மனிதர்களின் புதல்வர், புதல்வியரின் பெயர்களிலும் சிறந்ததொரு பெயரும் கொடுப்போம்@ ஒருபோதும் அழியாத, முடிவில்லாத பெயரை அவர்களுக்குச் சூட்டுவோம்.
6 ஆண்டவரிடம் அவரை வழிபடுவதற்காக அணுகி வந்து, அவருடைய அடியார்களாய் இருக்கும்படி ஆண்டவரின் திருப்பெயர் மேல் அன்பு கூர்கிற அந்நியர்கள் ஓய்வு நாளை அவசங்கை செய்யாமல் அதைக் கடைப்பிடித்து நமது உடன்படிக்கையை உறுதியாய்ப் பற்றியிருந்தால் -
7 அவர்களை நமது பரிசுத்த மலைக்குக் கூட்டி வந்து, நம் செப வீட்டில் அவர்கள் மகிழ்ந்திருக்கச் செய்வோம்@ நமது பீடத்தின் மேல் அவர்கள் தரும் தகனப் பலிகளும் மற்றப் பலிகளும் நமக்குகந்தவையாய் ஏற்கப்படும்@ ஏனெனில் நம் வீடு எல்லா மக்களினங்களுக்கும் செப வீடு என வழங்கப்படும்.
8 இஸ்ராயேலில் சிதறிப் போனவர்களைக் கூட்டிச் சேர்க்கும் இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: ஏற்கெனவே கூட்டிச் சேர்க்கப்பட்டவர்கள் தவிர, இன்னும் மற்றவர்களையும் அவர்களோடு கூட்டிச் சேர்ப்போம்."
9 வயல்வெளி மிருகங்களே, காட்டில் வாழும் விலங்குகளே, இரையை விழுங்க அனைவரும் வாருங்கள்@
10 நம் சாமக் காவலர்கள் யாவரும் குருடர்கள், அவர்கள் எல்லாரும் அறிவில்லாப் பேதைகள்@ அவர்கள் அனைவரும் ஊமை நாய்கள், அவர்களுக்குக் குரைக்கத் தெரியாது@ பகற்கனவு காண்பதிலும் படுத்துக் கிடப்பதிலும் தூங்கி விழுவதிலுமே விருப்பமுள்ளவர்கள்.
11 பேராசை கொண்ட ஈன நாய்கள், போதுமென்ற மனமே அவர்களுக்கில்லை@ மேய்ப்பவர்களுக்குக் கூட கொஞ்சமும் அறிவில்லை, அனைவரும் தத்தம் போக்கில் நெறி தவறிப் போயினர்@ பெரியவன் முதல் சிறியவன் வரையில் ஒவ்வொருவனும் தன் தன் ஆதாயத்தையே கருதுகிறான்.
12 வாருங்கள், திராட்சை இரசம் குடிப்போம், குடிவெறியால் நிரம்பப் பெறுவோம்@ இன்று போலவே நாளைக்கும் குடிப்போம், இன்னும் மிகுதியாய்ப் பருகுவோம்" என்கிறார்கள்.
