கொண்டிடு மண்டல மூன்றங்கி தன்னையிப் பிண்டமு மூழி பிரியா. |
301 |
வெள்ளி புதனொடு திங்க ளிடமெனத் தள்ளுமின் கால சரம். |
302 |
செவ்வாய் சனிநா யிறுவல மாகவே கொள்ளிலிவ் வாறிடரு மில். |
303 |
வளர்பொன் னிடம்பிறைத் தேய்வு வலமாம் வளர்பிறை யென்றே மதி. |
304 |
வலத்திற் சனிக்கே யிராப்பகல் வாயு செலுத்துபே ராது செயல். |
305 |
இயங்கும் பகல்வலமி ராவிடம் வாயு தயங்குறல் நாடிக்குட் டான். |
306 |
அரசறி யாம லவன்பே ருறைந்துத் தரைதனை யாண்ட சமன். |
307 |
கல்லாத மூடர் திருவுருக் கொண்டிடச் செல்லாத தென்ன செயல். |
308 |
திருவருட் பாலைத் தெரிந்து தெளியில் குருவிருப் பாமென்று கொள். |
309 |
கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற நிற்கில் பரமவை வீடு. |
310 |