செல்லல் நிகழல் வருங்கால மூன்றினையுஞ் சொல்லு மவுனத் தொழில். |
281 |
பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து துஞ்சாது ஞானச் சுடர். |
282 |
இமைப்பிற் பரந்தங் கொடுங்கு மின்போல் நமக்குட் சிவன்செயல் நாடு. |
283 |
குவித்து மனத்தைக் குவித்துள்ளே யோங்கில் செவித்துப் பெறுவ தெவன். |
284 |
காலுந் தலையு மொன்றாகக் கலந்திடம் நாலா நிலையென நாடு. |
285 |
மூல நிலமிசை மூன்றா நிலத்தினில் ஆல மருந்துஞ் சிவம். |
286 |
எழுஞ்சுட ருச்சியின் மேன்மனம் வைக்கத் தொழிலொன் றிலாத சுடர். |
287 |
அடைத்திட்ட வாசலின் மேன்மனம் வைத்துப் படைத்தவன் தன்னையே பார். |
288 |
அறுபதொ டாறு வருட மிதனை உறுதிய தாக யுணர். |
289 |
அட்டமா சித்தி யடையுமோ ராண்டினில் இட்ட மிதனைத் தெளி. |
290 |