பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். |
271 |
சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. |
272 |
வெளியில் விளைந்த விளைவின் கனிதான் ஒளியி லொளியா யுறும். |
273 |
மறவா நினையா மவுனத் திருக்கில் பிறவா ரிறவார் பினை. |
274 |
குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங் கிருபோது நீங்கா திரு. |
275 |
சுந்திரச் சோதி துலங்கு மிடமது மந்திரச் சக்கரமு மாம். |
276 |
தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது பாராப் பராபரம் பார். |
277 |
ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. |
278 |
அந்தமு மாதியு மில்லா வரும்பொருள் சுந்தர ஞானச் சுடர். |
279 |
இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து பதிவைத் தனன்குரு பார். |
280 |