
தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை. |
261 |
தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே நிற்பது பேரொளி நில். |
262 |
ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே பேதியா தோது பிணை. |
263 |
கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில் எழுந்தா ரகையா மிது. |
264 |
மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. |
265 |
காலுந் தலையு மறிந்து கலந்திடில் சாலவும் நல்லது தான். |
266 |
பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில் அன்னவன் றாளதுவே யாம். |
267 |
நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை யொன்றுவிக் கிலொன் றேயுள. |
268 |
பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில் ஆசான் பரநந்தி யாம். |
269 |
அழியா வுயிரை யவனுடன் வைக்கில் பழியான தொன்றில்லை பார். |
270 |