அடிமிசை வாயு வடுத்தடுத் தேகி முடிமிசை யோடி முயல். |
251 |
உண்ணாடி வாயு வதனையுட னிறப்பி விண்ணோடு மெள்ள விடு. |
252 |
மெள்ள விரேசித்து மெய்விம்மிப் பூரித்துக் கொள்ளுமின் கும்பங் குறித்து. |
253 |
இரேசக முப்பத் திரண்டது மாத்திரை பூரகம் பத்தாறு புகும். |
254 |
கும்பக நாலோ டறுபது மாத்திரை தம்பித் திடுவது தான். |
255 |
முன்ன மிரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம் பிடி. |
256 |
ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ் சேருமின் வாயுச் செயல். |
257 |
வாசலீ ரைந்து மயங்கிய வாயுவை ஈசன்றன் வாசலி லேற்று. |
258 |
தயாவினில் வாயு வலத்தி லியங்கில் தியான சமாதிகள் செய். |
259 |
ஆதியா மூலமறிந் தஞ்செழுத் தினைப் பேதியா தோது பிணை. |
260 |