3கண்ணாடி தன்னி லொளிபோ லுடம்பதனுள் உண்ணாடி நின்ற வொளி. |
231 |
3அஞ்சு புலனின் வழியறிந்தாற் பின்னைத் துஞ்சுவ தில்லை உடம்பு. |
232 |
3நாபி யகத்தே நலனுற நோக்கிடில் சாவது மில்லை யுடம்பு. |
233 |
3கண்டத் தளவிற் கடிய வொளிகாணில் அண்டத்த ராகு முடம்பு. |
234 |
3சந்திர னுள்ளே தழலுற நோக்கினால் அந்தர மாகு முடம்பு. |
235 |
3ஆர்க்குந் தெரியா வுருவந்தனை நோக்கில் பார்க்கும் பரமா மவன். |
236 |
3வண்ண மில்லாத வடிவை யறிந்தபின் விண்ணவ ராகு முடம்பு. |
237 |
3 நெற்றிக்கு நேரே நிறைந்த வொளிகாணில் முற்று மழியா துடம்பு. |
238 |
3மாதூ வெளியின் மனமொன்ற வைத்தபின் போதக மாகு முடம்பு. |
239 |
சுத்தமோ டொன்றி மனமு மிறந்தக்கால் முற்று மழியா துடம்பு. |
240 |