2மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்நோக்கில் கையகத்தி னெல்லிக் கனி. |
221 |
2கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத்தில் உரையற் றிருப்ப துணர்வு. |
222 |
2உண்டு பசிதீர்ந் தார்போ லுடம்பெல்லாஅங் கண்டுகொள் காதல் மிகும். |
223 |
2உரைசெயு மோசை யுரைசெய் பவர்க்கு நரைதிரை யில்லை நமன். |
224 |
2தோன்றாத தூயவொளி தோன்றியக்கா லுன்னைத் தோன்றாமற் காப்ப தறிவு. |
225 |
2வாக்கு மனமு மிறந்த பொருள்காணில் ஆக்கைக் கழிவில்லை யாம். |
226 |
2கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால் உன்னகத்தே நின்ற வொளி. |
227 |
2 ஆநந்த மான வருளை யறிந்தபின் தானந்த மாகு மவர்க்கு. |
228 |
2மறவாமற் காணும் வகையுணர் வாருக் கிறவா திருக்கலு மாம். |
229 |
விண்ணிறைந்து நின்ற பொருளே யுடம்பதன் உண்ணிறைந்து நின்ற வொளி. |
230 |