கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. |
161 |
பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. |
162 |
உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில் கருவேது மில்லை தனக்கு. |
163 |
கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை யறுத்துருவ மாற்றி யிரு. |
164 |
அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால் பினைப்பிறப் பில்லையாம் வீடு. |
165 |
நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால் தனக்கொன்று மில்லை பிறப்பு. |
166 |
குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு. |
167 |
பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச விகற்ப முணர்வதே வீடு. |
168 |
பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி அறுத்துருவ மாற்றி யிரு. |
169 |
ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால் பேசவும் வேண்டா பிறப்பு. |
170 |