எள்ளகத் தெண்ணெ யிருந்ததனை யொக்குமே உள்ளகத் தீச னொளி. |
141 |
பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே நூலின்க ணீச னுழைந்து. |
142 |
கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும் இரும்புண்ட நீரு மியல்பு. |
143 |
பழத்தி னிரதம்போற் பரந்தெங்கு நிற்கு மழுத்தினா லீச னிலை. |
144 |
தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி யணுவதுவாய் நிற்கு மது. |
145 |
வித்து முளைபோல் விரிந்தெங்கு நிற்குமே ஒத்துளே நிற்கு முணர்வு. |
146 |
அச்ச மாங்கார மகத்தடக்கி னாற்பின்னை நிச்சயமா மீச னிலை. |
147 |
மோட்டினீர் நாற்ற முளைமுட்டை போலுமே வீட்டுளே நிற்கு மியல்பு. |
148 |
நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலனாய் நிற்கும் அனைத்துயிர்க்குந் தானா மவன். |
149 |
ஓசையி நுள்ளே யுதிக்கின்ற தொன்றுண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து. |
150 |