3சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடுருவில் முத்திக்கு மூல மது. |
131 |
3அயனங்கொள் சந்திரனா லாதித்த னொன்றில் நயனமா முத்திக்கு வீடு. |
132 |
3அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந் துஞ்சாதவர் துறக்கு மாறு. |
133 |
3ஈசனோ டொன்றி விசையாப் பொருளில்லை தேசவிளக் கொளியே யாம். |
134 |
3தாஞ்செய் வினையெல்லாந் தன்மையற வுணரில் காஞ்சனமே யாகுங் கருத்து. |
135 |
3கூடகமான குறியெழுத்தைத் தானறியில் வீடக மாகும் விரைந்து. |
136 |
3வீடக மாக விழைந்தொல்லை வேண்டுமேல் கூடகத்திற் சோதியோ டொன்று. |
137 |
3பூரித்து நின்ற சிவனைப் புணரவே பாரித்த தாகுங் கருத்து. |
138 |
3இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில் பூரிப்ப துள்ளே சிவம். |
139 |
சிந்தையில் நின்ற நிலைவிசும்பிற் சாக்கிரமாம் சந்திரனிற் றோன்று முணர்வு. |
140 |