தேறித் தெளிமின் சிவமென்றே யுள்ளுணர்வில் கூறிய பல்குணமு மாம். |
121 |
உண்டில்லை யென்று முணர்வை யறிந்தக்கால் கண்டில்லை யாகுஞ் சிவம். |
122 |
ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம் ஒருவனே பல்குணமு மாம். |
123 |
எல்லார்க்கு மொன்றே சிவமாவ தென்றுணர்ந்த பல்லோர்க்கு முண்டோ பவம். |
124 |
ஆயுமிரவியு மொன்றே யனைத் துயிர்க்கும் ஆயுங்கா லொன்றே சிவம். |
125 |
ஓவாத தொன்றே பலவா முயிர்க்கெல்லாந் தேவான தென்றே தெளி. |
126 |
தம்மை யறியாதார் தாமறிவோ மென்பதென் செம்மையா லீசன் றிறம். |
127 |
எல்லா வுலகத் திருந்தாலு மேத்துவார்கள் நல்லுலக நாத னடி. |
128 |
உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன் நிலவுபோ னிற்கும் நிறைந்து. |
129 |
உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன் அலகிறந்த வாதியே யாம். |
130 |