கருத்துறப் பார்த்துக் கலங்காம லுள்ளத் திருத்திச் சிவனை நினை. |
111 |
குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சிந்தித்து மண்டலங்கள் மேலாகப் பார். |
112 |
ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்றன்னைப் பார்மின் பழம்பொரு ளேயாம். |
113 |
சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீசனை மிக்க மலத்தை விடு. |
114 |
அறமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சேர்ந் துறுமின்க ளும்முளே யோர்ந்து. |
115 |
நித்தம் நினைத்திரங்கி நின்மலனையொன்றுவிக்கில் முற்றுமவ னொளியே யாம். |
116 |
ஓசை யுணர்ந்தங்கே யுணர்வைப் பெறும்பரிசால் ஈசன் கருத்தா யிரு. |
117 |
இராப் பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கில் பராபரத்தோ டொன்றலு மாம். |
118 |
மிக்க மனத்தால் மிகநினந்து சிந்திக்கில் ஒக்க சிவனுருவ மாம். |
119 |
வேண்டுவோர் வேண்டும் வகைதான் விரிந்தெங்கும் காண்டற் கரிதாஞ் சிவம். |
120 |