அருளினா லன்றி யகத்தறி வில்லை அருளின் மலமறுக்க லாம். |
101 |
இருளைக் கடிந்தின் றிறைவ னருளால் தெருளும் சிவசிந்தை யால். |
102 |
வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற தூய்மையா மீச னருள். |
103 |
ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால் அவ்வகத்து ளானந்த மாம். |
104 |
உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய் மன்னுமருள் பெற்றக் கால். |
105 |
எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன் தொல்லையருள் பெற்றக் கால். |
106 |
சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமாம் பாச மறும். |
107 |
மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும் ஈசனருள் பெற்றக் கால். |
108 |
ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது தாவாதோ ஞான ஒளி. |
109 |
ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித் தாவாத வின்பந் தரும். |
110 |